நாம் தேவனில் நம்பிக்கைக் கொள்ளலாம்
ஜிம் ஒரு முறை, நாத்திகவாதி ஒருவரிடம், “ஒருவேளை கடவுள் இருக்கலாமோ என்கிற எண்ணம் எழுந்து ஒரு சில நொடிகளேனும் போராடியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“போராடியிருக்கிறேனே!” என்று நாத்திகர் சொன்னார். ஜிம்முக்கு ஆச்சரியமாக இருந்தது. “சில வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தபோது, நான் கிட்டத்தட்ட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகவே ஆகிவிட்டேன். “நான், தொட்டிலில், முழு வளர்ச்சியடைந்த-குட்டியான குழந்தையைப் தொட்டிலில் பார்க்கையில், அந்தப் பிஞ்சு விரல்கள் ஆடுவதையும், மலர்கின்ற அதன் சிறிய விழிகளில் அங்கீகரிப்பைக் காணகையில், நான் பல மாதங்களுக்கு ஒரு நாத்திகன் என்ற உணர்வே இல்லாமல் இருந்தேன். “அந்தக் குழந்தையைப் பார்க்கையில், அது கடவுள் ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்றே என் மனதிற்குத் தோன்றச் செய்தது.”